Tuesday, 1 March 2016

நவீன ஆங்கில மருத்துவத்தில்

நவீன ஆங்கில மருத்துவத்தில் நோய் அறிதல் (Diagnosis) என்பது ஒரு மிகப்பெரும் கலையாக வளர்ச்சியடைந்துள்ளது. பல்லா யிரக்கணக்கான சோதனைக்கூட ஆய்வுகள் ( Lab Tests), எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன், எம்.அர். ஐ.ஸ்கேன் என பல நவீன வழிமுறைகள் நோயின் காரணத்தை அறியவும், நோயின் தன்னமையை அளவிடவும் கண்டு பிடிக்கப்பட்டு விட்டன. சில வேளைகளில் நோயின் சிகிச்சைக்கு ஆகும் செலவைவிட என்ன நோய் என்பதை அறிவதற்குச்  செய்யப் படும் சோதனைகளுக்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கும் கூத்தும் நடக்கிறது.
        ஆனால் பல நவீன விஞ்ஞான விழிமுறைகள், கருவிகள் இருந்தும்கூட ஒரு நோய் உருவானதற்கான உடனடி காரணத்தை மட்டுமே ஆங்கில மருந்துவத்தில்  கண்டுபிடிக்க முடிகிறது. பெரும்பாலான வேளைகளில் நோயின் மூல காரணம் என்ன என்பதை அறியப்படாமல் சிகிச்சை அளிக்கப்படுவதால், உடனடியாக நிவாரணம் கிடைத்தாலும் கூட நோயிலிருந்து நிரந்தரமான விடுதலை கிடைப்பதில்லை.

        நவீன மருத்துவத்தில்  ஏன் இந்த குறைபாடு? நவீன விஞ்ஞானமும்,  மருத்துவமும் பருவுடலை மட்டுமே ஆராய்ந்து பார்க்கின்றன. பருவுடலுக்கு மட்டுமே சிகிச்சை தரப்படுகிறது.  இந்த பருஉடலை இயக்கும் சக்தியைப் பற்றியோ, பருவுடலைச் சுற்றி நிற்கும் சக்தி உடல்கள் குறித்தோ நவீன மருத்துவம் கவலைப்படுவதில்லை. அவை குறித்த அறிவோ, தெளிவோகூட நவீன விஞ்ஞானத்தில்  இதுவரையில் இல்லை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home