Tuesday, 1 March 2016

நோய்கள் எவ்வாறு உருவாகின்றன ?

        நோய்கள் உருவாகக் காரணமானவை என பலவற்றை நவீன மருத்துவம் பட்டியலிடுகிறது. ஆனால் அவை பெரும்பாலும் இரண்டாம் நிலைக் காரணிகளே தவிர, மூல காரணங்கள் இல்லை. நம் முன்னோர்கள்  கூறியுற்ற காரணங்களே மூல காரணங்களாகும். அவற்றைக் காணும்முன், நோய்கள் குறித்து நம் முன்னோர்கள் எழுதி வைத்துள்ள இரு முக்கியமான கருத்துக்களை மனதில் இருத்திக்கொள்வது அவசியம்.

       எந்த நோயும் முதலில் பருவுடலில் உருவாவதில்லை. அடிபடுதல், காயங்கள், விஷங்களின் தாக்கம் என ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. எனினும் , பெரும்பாலான நோய்களும், முதலில் பருவுடலில் ஆரம்பமாவதில்லை.

      அனைத்து நோய்களும் முதலில் சக்தி உடல்களிலேயே ஆரம்பமாகின்றன.

        சக்தி உடல்களில், சக்தி நாளங்களில் அல்லது சக்கரங்கள் உருவாகம் இந்தக் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே சரி செய்துவிட்டால் அவை நோயாக   உருமாறுவதில்லை. அவற்றைக் கவனிக்காமல் விடும்போது அந்தக் குறைபாடுகள் படிப்படியாக அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலே செல்லும்போது தான் அவை நோய்களாகப் பருவுடலில் வெளிப்படுகின்றன.
        பருவுடலுக்கு  மட்டுமே சிகிச்சை செய்யும்போது (மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவை) தற்காலிகமாக அந்த நோய் குணமானது போன்ற ஒரு தோற்றம் ஏற்படும். ஆனால் சிறிது காலத்தில் மீண்டும் அது வந்துவிடும். சக்தி உடல்களில் ஏற்பட்ட குறைபாடுகளை ( மூல காரணங்களை) சரி செய்தால்  மட்டுமே  மீண்டும் வராமல் தடுக்க முடியும். அந்த நோயிலிருந்து நிரந்தர மான விடுதலையும் கிடைக்கும்.

       சக்தி உடல்களில் குறைபாடுகள் தோன்ற மிக முக்கியமான காரணங்களாக சிலவற்றை நமது முன்னோர்கள் பட்டியலிட்டுள்ளனர் ;

     சக்தி உடல்களில் ஏற்படும் சக்தித் தடைகள், சக்தி தேக்கங்கள்.

       சக்தியை உருவாக்கும் சக்கரங்களின் இயக்கங்களில் ஏற்படும் குறைபாடுகள்.

        சக்தியை சுமந்து செல்லும் நாடிகளில் ஏற்படும் அடைப்புகள்.

       பஞ்ச பூதங்களின் (Five Elements) சமநிலையில் ஏற்படும் குறைபாடுகள்.

        ஆகிய நான்குமே நோய்களை உருவாக்கும் முக்கியமான காரணங்களாகும்.

       மேற்சொன்ன உடல்களில், சக்கரங்களில் , நாடிகளில், பஞ்சபூத சமநிலையில் ரன் குறைபாடுகள் ஏற்படுகின்றன ? அதற்கான மூல காரணங்களையும் நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.

எதிர்மறையான சிந்தனைகள், செயல்கள்.
தவறான சுவாசம்
தவறான உணவுப் பழக்கங்கள்
தவறான வாழ்க்கை முறைகள்.

       இந்த நான்கு மூல காரணங்களை இன்று நவீன ஆங்கில மருத்துவமும் ஏற்றுக் கொள்கிறது. பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, பல கோடி ரூபாய் செலவு செய்து இவற்றை நவீன மருத்துவம் தற்போது கண்டுபிடித்துள்ளதாக தம்பட்டம்  அடித்துக் கொள்கிறது. இவை குறித்து மேலும் ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.

       ஆனால் மெய்ஞ்ஞானம் இந்த உண்மைகளை எல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அக்குவேறு, ஆணி வேறாக அலசி ஆராய்ந்து முடித்து விட்டது. அத்தோடு நின்றுவிடாமல்  அவற்றை சரி செய்வதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்து வைத்துள்ளது.

     

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home