நோய் உருவாகும் காரணங்கள்;
நோய் உருவாகும் காரணங்கள்;
நமது பிராண சக்தியிலும் சக்தி உடல்களிலும் ஏற்படும் குறைபாடுகளே நோய்கள் உருவாக மூல காரணங்களாக அமைகின்றன. இந்தக் குறைபாடுகள் வராமல் தடுத்து விட்டால் நோய்கள் உருவாவதையும் தடுத்துவிடலாம். வந்துவிட்ட நோய்களைக்கூட பிராண சக்தியைச் சீர்செய்து குணப்படுத்திவிட முடியும்! இதற்கான பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்தனர். அவற்றுள் முக்கியமானவை என,
* யோகாசஙை்கள்
* பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி
* தியானம்
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை மூன்றுமே மிக அற்புதமான பலன்களைத் தருகின்ற பயிற்சிகளாகும். ஆனால் இவற்றை முறையாகக் கற்றுக் கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே முழுமையான பலன்கள் கிடைக்கும். உதாரணமாக, யோகாசனக் கலைகளில் உயர்நிலைகளை அடைய ஒருவர் குறைந்த பட்சம் 15-லிருந்து 20 வருடங்கள் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
பெரும்பான்மையான மனிதர்களுக்கு இது சாத்தியப்படாது என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது. இந்த சிக்கலுக்கு விடை தேடிய நமது முன்னோர்கள் சில எளிய வழிகளைக் கண்டுபிடித்தனர். இவற்றையே ' தந்திர வழிகள் ' (Tantric Techniques) என்கிறோம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home