கலியுகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கின்றது : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.
கிருதயுகம் 17,28,000 ஆண்டுகள் நடந்துள்ளது. அதன் பின்னர் திரேதா யுகம் 1296000 ஆண்டுகள் நடந்துள்ளது. அதன் பின்னர் துவாபர யுகம் 864000 ஆண்டுகள் நடந்துள்ளது. அந்த யுகங்களில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரையுமே தெய்வங்களாக போற்றுகிறார்கள். அவர்களுமே நீதி நெறிகளை கடைபிடித்து வந்துள்ளனர். இவர்கள் வாழ்ந்த வாடிக்கை முறையினையே நாம் இன்று மாகபாரதமாகவும் , இராமாயணமாகவும் கண்டு உணர்கிறோம். ஆனால் இப்போது பிறக்கப் போகும் கலியுகத்தைப் பற்றி பார்ப்போம்.
கலியுகம் முடிவதற்கு 4,32,000 ஆண்டுகள் ஆகும்.
கலியுகத்தின் முந்தைய யுகம் துவாபரயுகத்தின் கடைசி சில நாட்களில் நடந்த சம்பவத்தினை கேளுங்கள்.
ஒரு ஊரினில் வறியவன் ஒருவன் இருந்தான். அவன் வறுமையின் காரணமாக அவனிடம் இருந்து சிறிது நிலத்தையும் விற்கும் நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக அந்த நிலத்தை விற்று விட்டான். அந்த நிலத்தை வாங்கியவர் நிலத்தை பண்படுத்தும் போது அந்த நிலத்தில் இருந்து ஒரு புதையல் கிடைக்கிறது உடனே அவர் அந்த புதையலை எடுத்துக் கொண்டு நிலத்தின் முன்னாள் உரிமையாளரிடம் செல்கிறார். அவரிடம் சென்று , 'இது உன் நிலத்தில் கிடைத்த புதையல் . இது உனக்குத்தான் சொந்தமானது. நான் உன் நிலத்தை மட்டும் தான் வாங்கினேன். அதனுள் புதைக்கப்பட்ட உன் மூதாதையரின் சொத்தை இல்லை' என்று கூறி அதை அவனிடம் கொடுக்க, நிலத்தின் முன்னாள் உரிமையாளரோ நான் நிலத்தை உனக்கு விற்று விட்டேன். எனவே அதில் உள்ள அனைத்தும் உனக்குத் தான் சொந்தமானது. எனவே நீ இதை இப்போது இங்கிருந்து எடுத்துச் செல் என்றான். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியில் நாம் இருவரும் பேசித்தீர்த்தால் இப் பிரச்சனை தீர்வுக்கு வராது. ஆகையால் இப் பிரச்சனைக்கு யாரிடம் சென்று முடிவு கேட்போம் நீயே கூறு என்ற போது அதற்கு நிலத்தை விற்றவன் எனக்குத் தெரிந்த ஒரு முனிவர் ஒரு கவி பாடினார். அவர் பாடிய கவி கேலுங்கள் .
" குருவில்லாத வித்தை
அறிவில்லாத வித்தை
குணமில்லாத மனைவி ஆசை
குடிநலம் இல்லாத அரசு
சேதாரம் இல்லாத சென்னி
பசிஇல்லாத உண்டி புகழ்
உண்மை இல்லாத வசனம்
யோசனை இல்லாத மந்திரி
தைரியம் இல்லாத வீரன்
உதவி இல்லாத நட்பு
வாசமில்லா வண்ணமலர்
குறை இல்லாத தீபம்
பண்டிதர் இல்லாத பட்டினம்
பட்டினம் இல்லாத பரதேசி
கரணம் இல்லாத நடனம்
பசி இல்லாத பூஜை
சுத்தம் இல்லாத தெவசம்
பொறுமை இல்லாத அறிவு
உறவு இல்லாத மனிதன்
கிருபை இல்லாத தந்தை
பெரியோர்கள் இல்லாது
சபை வைத்திருந்து என்ன பயன்காண் !"
ஆகா, இப்பேர்ப்பட்ட கவியைக் கூறிய மகானிடமே நாம் சென்று நம் பிரச்சனைக்கு தீர்வு கேட்போம் என்று இருவரும் முனிவரிடம் வருகிறார்கள். முனிவரிடம் பிரச்சனையைக் கூறினார்கள். அனைத்தையும் கேட்ட முனிவர் அவர்களிடம் இன்னும் சில நாழிகைகளில் கலியுகம் தொடங்க விருக்கிறது . எனவே நீங்கள் இதை இங்கு வைத்துவிட்டு சில நாழிகை கழித்து வாருங்கள் என்றார்.
அவர்கள் சென்ற பின் அன்றைய பூஜைக்கு முன் நீராட வெளியே வருகிறார். அப்போது எதிரில் இருந்த புதையலைக் கண்டு அந்த முனிவர் ஐயோ உயிர்கொல்லி இருக்கிறதே என எண்ணி அதை விட்டு சுற்றிச் சென்றார். பின்னர் அவர் நீராடச் சென்று விட்டார்.
அப்போது அந்த வழியில் வந்த மூன்று திருடர்கள் அந்த புதையலைக் கண்டு மகிழ்கின்றனர். மூவரில் ஒருவன் இதைத் தற்பொழுது எடுத்துச் சென்றால் மக்களுக்கு சந்தேகம் தோன்றும் , எனவே, " நானும் இவனும் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நீ வீட்டிற்குக் சென்று சாப்பிட்டுவிட்டு எங்களுக்கும் உணவை வாங்கி வா !" என்றனர்.
சாப்பாடு வாங்கப் போனவன் போகும் போதே யோசிக்கிறான். இந்தப் புதையலை மூன்று பங்காகப் போட்டால் சிரியாக வராது என எண்ணினான். இதனால் அந்த இருவரையும் உணவில் விஷம் வைத்து கொன்று விடலாம் எனத் திட்டமிட்டு அவனது வீட்டினிலே உணவை வைத்து அதில் விஷம் கலந்து விட்டான். அதே வேளையில் அங்கு புதையலைப் பார்த்துக் கொண்டு இருந்த இருவரும் புதையலை இரண்டு பங்காகப் போட்டுக் கொள்ளலாம். அவனை தண்ணீர் கொண்டு வர அனுப்பி அவனைத் கொன்று விடலாம் என எண்ணினர். இதனால் அவன் வந்த பிறகு அவனைத் தண்ணீர் கொண்டு வர அனுப்பி விட்டு அவன் பின்னே சென்று அடித்துக் கொன்று விட்டனர். பின் இவர்கள் இருவரும் விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டு இறந்து விட்டனர். அப் பொழுது நீராடி விட்டு திரும்பி வந்த முனிவர் இதைப் பார்த்து விட்டு கலியுகம் தொடங்கி சிறிது நேரத்தில் இந்த புதையல் (பணம்) மூன்று மனிதர்களைக் கொன்று விட்டதே என எண்ணி வருந்தினார். பின்னர் அவர் வீட்டினுள் சென்று விட்டார். அப்போது புதையலை எடுத்தவன், நிலத்தின் முன்னாள் சொந்தக்காரன் இவர்களின் மனதை கலியுகம் பிறந்தவுடன் மாற்று கிறது. இருவரும் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் சமாளிக்க வேண்டும் என எண்ணி மூங்கிலை கத்தி போல் செதுக்கி மறைத்துக் கொண்டு முனிவரிடம் வந்தனர். அப்போது நிலத்தின் முன்னாள் சொந்தக் காரன் புதையல் தனக்குத் தான் சொந்தம் என பேசினான். புதையலை எடுத்தவனோ " புதையல் எனக்குத் தான் சொந்தம்" எனக் கூறி வாக்குவாதம் செய்தனர். இறுதியில் இரு வரம் மறைத்து வைத்திருந்த மூங்கிலை வைத்து ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டு இறந்து விட்டனர். விட்டை விட்டு வெளியே வந்த முனிவர் இதைப் பார்த்து கலியுகம் தோன்றி சில நாழிகைகளிலே இந்தப் புதையல் ஐந்து பேரை கொன்று விட்டதே. மெளனமாக இருந்தே ஐந்து பேரை மரணத்திற்கு அனுப்பி விட்டதே. இது பணமல்ல இது உயர்கொல்லி ! இந்தப் புதையல் இனி இங்கே இருக்கக் கூடாது என எண்ணி தூக்கி தூர எறிந்து விட்டார்.
அது மட்டும் ஆச்சரியம் இல்லை . இனிமேல் கலியுகம் மற்றும் வேலையில் சாதி பேதங்கள் மறையும். திடீர் திடீரென பூகம்பங்களும், கடல் கொந்தளிப்பும் ஏற்படும். வெயில் தாங்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும். பனியும் அதே போல் தாக்கும் . மழையும் அதேபோல் கொட்டும். வருடத்தில் இரண்டு மாதங்களில் மட்டும் தொந்தரவு தந்த கொசு அப் பொழுது 12 மாதமும் கடிக்கும். மின் விசிறியினால் கூட இதை விரட்ட முடியாது. அந்த அளவுக்கு கொசு தனது பலத்தைப் பெருக்கி விடும். புரட்டாசி மாதம் மட்டுமே இணை கூடும் நாய்கள் இனி அனைத்து மாதங்களிலும் கூடும். ஆடு மாடுகள் போல் மனிதர்களும் முறையின்றி பெண்டாளும் தன்மை தோன்றும்.
கலியுகத்தினில் ஒரு முட்டையினில் இரு குஞ்சுகள் பொறிக்கும். ஒரு பசு நான்கு கன்றுகள் போடும். ஒரு பெண்ணின் கருவினில் ஐந்து ஆறு குழந்தைகள் தோன்றும் என சிவ பெருமான் பார்வதியிடம் கூறினார், பார்வதி நத்தீஸ்வரரிடம் கூறினார். நந்தீஸ்வரர் கோரக்கரிடம் கூறினார். கோரக்கர் கூறியவற்றை தாமரை பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட கோரக்கர் சந்திர ரேகை எனும் நூலில் கூரியவைகளை நான் உங்களுக்கு கூறுகிறேன். இந்த கலியுகம் முற்ற முற்ற அந்தணர்களுக்கு அழிவு காலம் . சம்புவர்களுக்கு ஓங்கு காலம் . இந்த நெறி முறைகளை படித்த பின்பு முன்பு கழிந்தயுகங்களில் வாழ்ந்தவர்களைப் போல் நல்ல நெறிமுறையை கடைப்பிடித்து வாழ வேண்டும். பணம் ஒரு பெரிய விஷயமெயல்ல !. மக்கள் நல்லவற்றையே எண்ண வேண்டும். கோயில்களில் மரங்களை நட வேண்டும். அதனால் பல்வேறு நன்மைகளும் , சிறு உயிர் முதல் பெரிய உயிர் வரைக்கும் கிட்டும். மரம் நடுபவரின் வாழ்க்கையினில் நலம் தோன்றும். அவர்களின் சந்ததிகளும் வளம் பெறுவர்.
பின் வரும் கருத்துக்களை படித்து வாழ்வில் வளம் பெறுக!.

2 Comments:
Kaliyugam mutri vittadhu
Kaliyugam mutri vittadhu
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home